ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

vinoth

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (15:23 IST)
ஒன்றிய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதா, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகத் தடை செய்யப்படுகின்றன.

இந்த நடவடிக்கை காரணமாக, பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம்11, தனது தளத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது. இதன் காரணமாக பெருமளவில் வருவாயை ஈட்டி வருகிறது. ஆனால் தற்போது இந்த மசோதா காரணமாக இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை என்று பிசிசிஐயிடம் dream 11 நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிசிசிஐ தரப்பில் இருந்து செயலாளர் தேவஜித் சைக்கியா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் “மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை அடுத்து ட்ரீம் 11 உடனான உறவை முடித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களோடு பிசிசிஐ தொடர்பு வைத்துக் கொள்ளாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்