சந்தேகத்துக்கு இடமான பார்சல்… ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என இந்திய அணியினருக்கு அறிவுரை!

vinoth

புதன், 2 ஜூலை 2025 (09:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது.  இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த போட்டியை ஒட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்திய அணியினர் தங்க வைக்கபட்டுள்ளனர்.

அந்த ஹோட்டலை ஒட்டியுள்ள செண்ட்டினரி ஸ்கொயர் என்ற பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பார்சல் ஒன்று காணப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக அதை யாருமே எடுக்காததால் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட, இந்திய அணியினர் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அந்த பார்சல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. அதில் ஆபத்தான எதுவும் இல்லை என்று தெரிந்ததும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்