இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டி.. இந்திய வீராங்கனை உலக சாதனை..!

Siva

புதன், 2 ஜூலை 2025 (12:59 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்  ரிச்சா கோஷ், ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 181 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது. 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இந்த போட்டியில் இந்தியாவின்  ரிச்சா கோஷ் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டத்தின் 32வது ரன்னை எடுத்தபோது டி20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களை எட்டி வரலாறு படைத்துள்ளார். மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், 140-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1000-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஒரே வீராங்கனை என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் பெற்றுள்ளார்.
 
மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனைகள்:
 
ரிச்சா கோஷ் (இந்தியா): ஸ்ட்ரைக் ரேட் - 143.11, ரன்கள் - 1029
 
லூசி பார்னெட் (ஐல் ஆஃப் மேன்): ஸ்ட்ரைக் ரேட் - 139.69, ரன்கள் - 1172
 
தஹிலா மெக்ராத் (ஆஸ்திரேலியா): ஸ்ட்ரைக் ரேட் - 132.94, ரன்கள் - 1138
 
சோலி டைரோன் (தென் ஆப்பிரிக்கா): ஸ்ட்ரைக் ரேட் - 132.81, ரன்கள் - 1283
 
அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா): ஸ்ட்ரைக் ரேட் - 129.79, ரன்கள் - 3208
 
ரிச்சா கோஷ், 2020 ஆம் ஆண்டு 16 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக தனது டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 64 போட்டிகளில் விளையாடி, 53 இன்னிங்ஸ்களில் 27.81 சராசரியுடன் 1029 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது,.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்