மீண்டும் மைதானத்துக்குள் புகுந்த ஜார்வோ… பேட் செய்வேன் என அடம்பிடித்து அழிச்சாட்டியம்!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (10:59 IST)
இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜார்வோ என்ற நபர் அதிகளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.

நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வீரர்களுக்கு இடையிலான ஸ்லெட்ஜிங் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜார்வோ என்ற நபரும் கவனம் ஈர்த்துள்ளார். இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்துக்கு வந்து பேட் செய்வேன் என அடம்பிடித்தார். அப்போது அவரைக் காவலாளிகள் அங்கிருந்து அகற்றினர்.

அதேபோல இப்போது மூன்றாவது டெஸ்டிலும் முழு கிட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்து பேட் செய்வேன் என மீண்டும் அடம்பிடித்துள்ளார். இந்த காட்சிகள் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்