சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகலா?

Webdunia
புதன், 11 மே 2022 (16:31 IST)
சிஎஸ்கே அணியிலிருந்து ஜடேஜா விலக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நடப்பு சீசனில் இருந்து சென்னை அணி வீரர் ஜடேஜா விலகல் என தகவல் வெளியாகி உள்ளது. ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால்
 
ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 3 லீக் போட்டிகளிலும் சென்னை அணி வென்றாலும் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலையில் இந்த தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்