ஐபிஎல் 2022: புள்ளிப்பட்டியலில் உள்ள முதல் இரண்டு அணிகள் இன்று மோதல்!
செவ்வாய், 10 மே 2022 (10:56 IST)
ஐபிஎல் 2022: புள்ளிப்பட்டியலில் உள்ள முதல் இரண்டு அணிகள் இன்று மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 57வது போட்டி லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது
இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லக்னோ மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் ஆகிய இரண்டு அணிகளுமே 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து 16 புள்ளிகளுடன் உள்ளன
ரன்ரேட் அடிப்படையில்தான் லக்னோ முதலிடத்திலும் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று வெற்றி பெறும் அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது