129 இலக்கு கொடுத்த அயர்லாந்து.. இலக்கை நெருங்கிவிட்ட இலங்கை!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:02 IST)
129 இலக்கு கொடுத்த அயர்லாந்து.. இலக்கை நெருங்கிவிட்ட இலங்கை!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனையடுத்து 129 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி தற்போது 9 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 71 ரன்கள் எடுத்துள்ளது 
 
இன்னும் 11 ஓவர்கள் இருக்கும் நிலையில் 58 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பதும், இந்த போட்டியில் இலங்கை அணி மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்