இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 200 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் டிவொன் கான்வாய் அபாரமாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பின் ஆலென் 16 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸி அணி தற்போது பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் பவர்ப்ளே முடிவதற்குள் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய அளவில் ஸ்கோர்களை சேர்க்கவில்லை. அந்த அணியின் மேக்ஸ்வெல் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்கள் சேர்த்தார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த ஆஸி அணி 111 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 92 ரன்கள் சேர்த்த டிவோன் கான்வாய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.