2024 ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான்.. ஐபிஎல் தலைவர் அருண் தூமல் உறுதி!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (18:24 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்ற போது தென்னாப்பிரிக்காவிலும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது துபாயிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் இந்தியாவில் நடைபெற இருப்பதை அடுத்து மீண்டும் வெளிநாட்டில் தான் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் தூமல்  அவர்கள் உறுதிபட கூறியுள்ளார்.

இந்த ஆண்டும் இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. . மக்களவைத் தேர்தல் அட்டவணையை பார்த்துவிட்டு அதன் பின்னர் ஐபிஎல் அட்டவணை ஏற்பாடு செய்யப்படும் என்றும் அருண் தூமல்  கூறியுள்ளார்  

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்