இங்கிலாந்தில் ஐபிஎல் போன்ற தொடரை ஆரம்பிக்கும் லலித் மோடி… கைகோர்க்கிறதா சி எஸ் கே அணி நிர்வாகம்?

vinoth

புதன், 14 பிப்ரவரி 2024 (07:54 IST)
ஐபிஎல் என்ற பிசிசிஐக்கு பணமழைக் கொட்டும் லீக் தொடரை வடிவமைத்துக் கொடுத்து ஆரம்பித்து முதல் சில வருடங்கள் வழிநடத்தியவர் லலித் மோடி. தற்போது உலகக் கிரிக்கெட்டின் வெற்றிகரமான லீக் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது ஐபிஎல் தொடர்.

ஆனால் லலித் மோடி பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இப்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர் மேல் இந்தியாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவர் இப்போது இங்கிலாந்தில் ஐபிஎல் போன்ற தொடர் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த தொடரில் அணிகளை வாங்குவதற்கு இந்தியாவில் இருந்து முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதில் முதல் கட்டமான சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த லீக்கில் ஒரு அணியை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ-ன் எதிரியாக கருதப்படும் லலித் மோடியோடு சிஎஸ்கே அணி நிர்வாகம் கைகோர்ப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்