இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் என்று நினைக்கவேண்டாம்… சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி கருத்து!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:24 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்தான் சிஎஸ்கேவின் கடைசி தொடர் என்று நினைக்க வேண்டாம் என சிஎஸ்கே சீஈஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின் ஒரு ஆண்டாக எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடாத தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வை அறிவித்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடினார். ஆனால் கடந்த ஆண்டு மிக மோசமான தோல்விகளை தழுவிய சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு செல்லாமல் வெளியேறியது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் இதுதான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் சென்னை அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் ‘எனக்கு தெரிந்து இது தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்க வாய்ப்பில்லை. என் தனிப்பட்ட கருத்து இது. இதுவரை நாங்கள் மாற்றுக் கேப்டன் குறித்து யோசிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்