சென்னை பல்கலை.யின் பட்டமளிப்பு விழா: கொரோனா பரிசோதனை செய்தால் மட்டும் அனுமதி

வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:24 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் 163 வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே பட்டம் அளிக்கப்படும் என்றும் அந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும். அந்தவகையில் 163 வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விழாவில் பங்கேற்று உள்ளதை அடுத்து இதுவரை இந்த விழாவில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ள 872 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சிலருக்கு பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த பட்டமளிப்பு விழாவில் கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்