கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனதால் ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க சென்றுவிட்டார். இதனை அடுத்து ’இந்தியன் 2’படத்தை இயக்கி முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் 150 கோடிக்கு இந்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் 250 கோடிக்கு மேல் தற்போது செலவாகி விட்டதாகவும் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடியில் 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும் எனவே எங்கள் படத்தை இயக்கி முடித்த பின்னர்தான் அவர் வேறு படத்தை இயக்க வேண்டும் என்றும் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளது
ஷங்கர் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க சென்றதாலேயே இந்த பிரச்சனையை லைகா நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றுள்ளது. ஆனால் ஷங்கர் மற்றும் லைகா நினைத்தால் கூட இப்போது அந்த படத்தை தொடங்க முடியாத சூழல்தான் உள்ளதாம். ஏனென்றால் படத்தில் நடிக்கும் எல்லா நடிகர்களின் தேதிகளை வாங்குவது மற்றும் படத்துக்கு தேவையான 10 செட்கள் அமைப்பது என ஏகப்பட்ட வேலைகள் உள்ளனவாம். அதுமட்டுமில்லாமல் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளமும் சில கோடிகள் உள்ளதாம். அதையெல்லாம் கொடுக்காமல் படத்தை ஆரம்பிக்க முடியாது என சொல்லப்படுகிறது.