ஆசிய கோப்பை கிரிக்கெட்: 'டை'யில் முடிந்த இந்திய-ஆப்கன் த்ரில் போட்டி:

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (06:29 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 'டை' ஆனது

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது சாயிஜ் 124 ரன்கள் குவித்தார்.

253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, தொடக்கத்தில் ரன்களை குவித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்ததால் இலக்கை அடைய திணறியது.

இந்த நிலையில் கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட்டு மட்டுமே கைவசம் இருந்த நிலையில் ஜடேஜா மற்றும் கேகே அகமது பேட்டிங் செய்தனர். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை, இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி சென்றதால் வெற்றி பெற 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 3வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் 1 ரன்னும் அடித்த நிலையில் ஸ்கோர் சமமானது. இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் ஜடேஜா அவுட் ஆனதால் போட்டி 'டை' ஆனது.

சதமடித்த ஆப்கன் வீரர் முகமது சாயிஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்