மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை திரிஷா மட்டுமே 49 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீராங்கனைகள் குறைவான ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்த நிலையில் 119 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடிய நிலையில் அந்த அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் உள்ள ராஷ்மிகா மட்டுமே 15 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தார் என்பதும் மற்ற அனைத்து வீராங்கனைகளும் சிங்கிள் டிஜிட்டல் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது