ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

vinoth
வியாழன், 23 ஜனவரி 2025 (14:47 IST)
சமீபகாலமாக இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில்  ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான்.  இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள ரஞ்சி போட்டியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் முடிவை எடுத்தார்.  ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடுகிறார்.

இந்த போட்டியில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே போல ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகிய இந்திய அணி வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்