ஒரு ஜப்பான் பொம்மைப்படத்துக்கு இவ்ளோ எதிர்பார்ப்பா? - இந்தியாவில் வெளியாகும் Attack on Titan!?

Prasanth Karthick

வியாழன், 23 ஜனவரி 2025 (12:35 IST)

இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு பல ஆண்டுகளாகவே வரவேற்பு இருந்து வரும் நிலையில், தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் பல்வேறு நாட்டு திரைப்படங்கள், வெப் சிரிஸ்களும் இந்திய இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

 

முக்கியமாக கொரியன் திரைப்படங்கள், வெப் சிரிஸ்கள் போன்றவை இந்த கால இளைஞர்களின் விருப்பத்திற்குரியதாக உள்ளது. அப்படியாக தற்போது இந்திய பொழுதுபோக்கு மார்க்கெட்டில் அனிமே கலாச்சாரம் தீவிரமாக பரவி வருகிறது. சிறுவர்கள் நருட்டோ, ஒன் பீஸ் போன்ற தொடர்களை தொடர்ந்து விரும்பி பார்ப்பது போல, இளைஞர்கள் ஜூஜூட்சு கெய்சன், டீமன் ஸ்லேயர் உள்ளிட்ட பல தொடர்களை காண்கின்றனர்.

 

அப்படியாக ஜப்பானிய அனிமே தொடர்களில் பிரபலமான ஒன்றாக உள்ளது அட்டாக் ஆன் டைட்டன் எனும் தொடர். இந்த தொடரின் இறுதி அத்தியாயமான Attack On Titan The Last attack என்ற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி அனிமே ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. டைட்டன் என்னும் பெரிய அசுரர்களுக்கும், மனிதர்களுக்கும் நடக்கும் போர்தான் கதைகளம். இந்த டைட்டன்கள் முந்தைய காலத்தில் மனிதர்களாக இருந்தவர்கள்தான். இதில் சமூக ஏற்றத்தாழ்வுகள், சர்வதிகாரம் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்களை கொண்ட தொடராக இது உள்ளது.

 

முன்னதாக தமிழ்நாட்டில் பெருநகரங்களில் மட்டும் இதுபோல வெளியான அனிமே திரைப்படங்களான ஜூஜூட்சு கெய்சன், சோலோ லெவலிங் போன்றவற்றிற்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இந்த அட்டாக் ஆன் டைட்டன் படமும் இந்தியாவில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த படம் பிப்ரவரி 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்