ஃபாலோ ஆன் ஆனது இந்திய அணி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (19:28 IST)
ஃபாலோ ஆன் ஆனது இந்திய அணி: ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மழை காரணமாக நடைபெறவில்லை என்ற நிலையில் அதே இங்கிலாந்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தபோது 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது 
 
இதனையடுத்து இந்திய மகளிர் அணி ஃபாலோ ஆன் ஆன நிலையில் இந்திய மகளிர் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்களுடன் இன்றைய ஆட்டம் முடிவடைந்துள்ளது. இதுவரை மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி தற்போது 118 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்