தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற பாலிவுட் இயக்குனர்!

வெள்ளி, 18 ஜூன் 2021 (09:50 IST)
தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

D2 Men who crossed d barriers2 Celebrate Cinema

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்