இந்திய கிரிக்கெட் அணி வாரியம் இதற்கு சரிப்பட்டு வராது....

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (15:33 IST)
டெஸ்ட் போட்டியை இரண்டு இன்னிங்ஸாக முழுவதும் விளையாடிய காலம் மாறி தற்போது ஐந்து நாட்களுக்கு விளையாடப்படுகிறது. 


 
 
தற்போது டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு மங்க ஆரம்பித்துள்ளது.  ஆஷஸ் தொடர் போன்ற முக்கியமான தொடரை மட்டுமே ரசிகர்கள் பார்க்க விரும்புகின்றனர். 
 
பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் முழுவதும் நடைபெறுவதில்லை. நான்கு நாட்களுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஏதாவது ஒன்றிரண்டு போட்டிகள் மட்டுமே ஐந்து நாட்கள் முழுவதுமாக நடைபெறுகிறது. 
 
இதனால் டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் கொண்டதாக குறைக்கப்படலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
 
ஆனால் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிற்கு வாய்ப்பில்லை என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில்தான் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்