இந்நிலையில் இப்போது டெவேன் கான்வேவின் தந்தை டெண்டன் கான்வே இயற்கை எய்தியுள்ளதாக சி எஸ் கே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கடினமான நேரத்தில் கான்வே மற்றும் அவரது குடும்பத்தினரோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சி எஸ் கே அணி ரசிகர்கள் டெண்டன் கான்வேவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே கடந்த போட்டியில் சி எஸ் கே அணியின் கருப்புப் பட்டை அணிந்து ஆடியுள்ளனர்.