இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது.
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பேட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்க பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
இதன் மூலம் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது.