தென் ஆப்பிரிக்க அணிக்கு 238 ரன்கள் இலக்கு: சூர்யகுமார் யாதவ் அபாரம்!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (20:48 IST)
தென் ஆப்பிரிக்க அணிக்கு 238 ரன்கள் இலக்கு: சூர்யகுமார் யாதவ் அபாரம்!
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது 
 
சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக விளையாடி 22 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். விராட் கோலி 49 ரன்கள் அடித்துள்ளார்
 
இந்த நிலையில் 238 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென்னாப்பிரிக்கா அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இமாலய இலக்கை  தென் ஆப்பிரிக்க அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்