தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக தாமதம்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (13:08 IST)
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக தாமதம்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் மழை காரணமாக ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போட்டி 2 மணிக்கு தொடங்கும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் மழை தொடர்ந்து பெய்தால் போட்டி ரத்து செய்யப்படும் அல்லது ஓவர் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று மதியம் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 2 மணிக்கு போட்டி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்