பூம்ராவுக்கு பதில் உலகக்கோப்பையில் விளையாட போவது யார்… பயிற்சியாளர் டிராவிட் பதில்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (08:49 IST)
ஜாஸ்ப்ரீத் பூம்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பதில் மாற்று வீரராக யார் களமிறங்குவார்கள் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள பயிற்சியாளர் டிராவிட் “முகமது ஷமி கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததும் அது பற்றி முடிவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார். இதனால் சிராஜ் மற்றும் ஷமி ஆகியோரில் ஷமி விளையாடவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்