ஓப்பனர்ஸ் இருவருமே செஞ்சுரி.. அதன்பின் மளமளவென விழும் விக்கெட்டுக்கள்: இந்தியா ஸ்கோர்

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:31 IST)
ஓப்பனர்ஸ் இருவருமே செஞ்சுரி.. அதன்பின் மளமளவென விழும் விக்கெட்டுக்கள்: இந்தியா ஸ்கோர்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில் இருவருமே நியூசிலாந்து பந்து பேச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்து சதம் அடித்தனர்
 
ரோகித் சர்மா 101 ரன்கள் சுப்மங்கில் 112 ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால் இருவரும் அவுட் ஆன பிறகு விராட் கோலி, இசான் கிஷான், சூரியகுமார் யாதவ் ஆகிய மூவரும் அடுத்தடுத்த அவுட் ஆகியுள்ளனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வரும் நிலையில் இருவரும் நன்றாக விளையாடினால் 400 ரன்கள் நெருங்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்