விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பந்து வீச்சாளர்கள்: தோல்வியை நோக்கி இந்தியா!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (13:09 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்த திணறி வருவதை அடுத்து இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 220 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து விட்டது. இன்னும் 32 ஓவர்களில் அந்த அணி 116 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்து வீச்சாளர்கள் இதுவரை ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளனர் என்பதால் இந்தியாவின் தோல்வி கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக வர்ணனையாளர்கள் கூறிவருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்