பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

vinoth

வெள்ளி, 16 மே 2025 (08:52 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரகாலம் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன.

ஐபிஎல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டாலும் தாய்நாடு சென்ற வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. அப்படி விளையாடாத விரும்பாதவீரர்களை அணி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும்  விருப்பமிருப்பவர்கள் மட்டும் விளையாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வாரியங்கள் வீரர்களை தாய்நாட்டுக்கு அழைத்தனர். ஆனால் தற்போது தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் தாங்கள் ஜூன் 3 ஆம் தேதிக்குப் பிறகு பயிற்சிகளைத் தொடங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. அதனால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்