இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 48வது ஓவரில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன்கள் அடித்தார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களை தவிர மற்றவர்கள் சொதப்பியதால் இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து 220 என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் ஒரு சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரையும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது