மழையால் தோல்வியில் இருந்து தப்பித்த இந்தியா.. தொடரை வென்ற நியூசிலாந்து

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (14:59 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது 
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி 220 என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது 
 
இந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது . இதனால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. இருப்பினும் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்