பெண்கள் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (18:47 IST)
பெண்கள் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!
பெண்கள் டி20 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்கள் ஆக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் அயர்லாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பதும் இதனை அடுத்து தற்போது மந்தனா மற்றும் வர்மா ஆகியோர் தொடக்க ஆட்ட வீராங்கனைகளாக களம் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்