இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி நடைபெறும் முன்னரே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
இன்று காலை அடிலெய்ட் மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது
இதனை அடுத்து 159 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
தென் ஆப்பிரிக்க அணியின் இந்த தோல்வி காரணமாக அந்த அணி மொத்தம் ஐந்து புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி 6 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருப்பதால் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடதக்கது
மேலும் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது