ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: போராடி தோல்வி அடைந்த இந்திய அணி!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:08 IST)
இந்தியா மற்றும் பிரிட்டன் மகளிர் கால்பந்து அணிகளுக்கு இடையே இன்று ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது 
 
இந்திய அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதல் ஆவேசமாக விளையாடிய போதிலும் அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டு இந்திய வீராங்கனைகளுக்கு பிரிட்டன் வீராங்கனைகள் அதிர்ச்சி கொடுத்தனர் 
 
ஆனால் இந்தியாவின் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு போட்டியை சமன்படுத்தினார். அதுமட்டுமின்றி வந்தனாவின் முயற்சியால் மேலும் ஒரு கோல் இந்திய அணிக்கு கிடைத்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது
 
ஆனால் இரண்டாம் பாதியில் பிரிட்டன் வீராங்கனைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அந்த அணிக்கு கிடைத்தது. இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை இழந்தது. இருப்பினும் இந்திய அணி வீராங்கனைகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்