இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று சென்னையில் தொடங்கிய 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சற்றுமுன்னர் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும் ரிஷப் பண்ட் 58 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டுக்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும், ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் லீச் 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்