இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே நேற்று நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் சர்மா அபார சதத்தால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இங்கிலாந்து தனது வரலாற்றின் மோசமான தோல்வியை நேற்று பதிவு செய்துள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து 135 ரன்கள் எடுத்தார். இதில் 13 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இதனை அடுத்து, 248 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி படுமோசமாக பேட்டிங் செய்து 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான சால்ட் மட்டுமே 55 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த அத்தனை பேட்ஸ்மெங்க்களும் சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி மூன்று விக்கெட்கள் எடுத்த நிலையில், வருண் சக்கரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்களை எடுத்தனர். நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் மற்றும் தொடர் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.