நான் கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன்: உசைன் போல்ட் பேச்சு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:52 IST)
நான் கிரிக்கெட் வீரர் அல்லது கால்பந்து வீரராக வந்திருப்பேன் எனதடகள வீரர் உசைன் போல்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் 
 
சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசியபோது நான் கிரிக்கெட் பார்த்து தான் சிறுவயதில் வளர்ந்தேன் என்றும் எனக்கு கால்பந்து மீதும் காதல் இருந்தது என்றும் கூறினார் 
 
நான் கிரிக்கெட் விளையாடும்போது வேகமாக ஓடி வந்து பந்து வீசுவதை பார்த்த கிரிக்கெட் பயிற்சியாளர் என்னை ஓடுவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்தினார் என்றும் அதன் பிறகுதான் தடகள போட்டியாளராக மாறினேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
உலக சாம்பியன் உசைன் போல்ட் கிரிக்கெட் வீரராக வந்து இருப்பேன் என பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்