தோல்வியை சந்திக்காத இந்திய கேப்டன் இவர்தான்!

திங்கள், 29 நவம்பர் 2021 (19:13 IST)
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு தகுதிய பெறவில்லை. இந்த வருத்தம் இந்திய ரசிகர்களுக்கு அதிகம் இருந்தாலும், நியூசிலாந்துக்கு எதிரன டி-20 தொடரை இந்தியா வென்றது.

இதையத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், கபில்தேவ், கங்குலி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி கேப்டன்கள் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்ததுண்டு. ஆனால்,  ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய டெஸ்ட் போட்டியில் இதுவரை தோல்வியைத் தழுவதில்லை என தகவல் வெளியாகிறது.

 அவர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். இதில் 4 வெற்றியும் 2 டிராவும் பெற்றுள்ளார். அதேபோல்ம் 3 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று அதில் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்