உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (07:57 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடைபெற்ற துனிஷியா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் துனிசியா ஒரு போல் போட்டு வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியன் அணி ஒரு கோல் கூட போடாமல் அதிர்ச்சி தோல்வி அடைந்தது
 
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற போலந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா 2 கோல் போட்டு போலந்து அணியை வீழ்த்தியது
 
அதேபோல் இன்று நடைபெற்ற மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் மெக்சிகோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டியும் கனடா மற்றும்  மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்