உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து வெற்றி!

புதன், 30 நவம்பர் 2022 (07:39 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் மோதிய நிலையில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 3 கோல் போட்டது என்பதும், வேல்ஸ் அணி ஒரு கோல் கூட போட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது 
 
மேலும் இன்று பிரான்ஸ் மற்றும் துனிஷியா அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்