களமிறங்கிய 4 வீரர்களும் அரைசதம்.. அரைசதத்தை நெருங்கிய 5வது வீரர் கே.எல்.ராகுல்..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (16:53 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் 40 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அரை சதம் அடித்த நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய  இருவரும் அரை சதம் அடித்துள்ளனர்.

இதுவரை களம் இறங்கிய நான்கு பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்த நிலையில் கே.எல் ராகுலும் அரை சதத்தை நெருங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏற்கனவே அரையிறுதியில் விளையாடும் அணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டது என்பதால் இன்றைய போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்