இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா உலக சாம்பியன்ஷிப் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (08:14 IST)
இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதை அடுத்து அதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
 
ஹைதராபாத்தில் முதல் முறையாக உலக ஃபார்முலா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று அதாவது ஜனவரி 4 முதல் தொடங்கியது. தெலுங்கானா அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் அரவிந்த் குமார் அவர்கள் முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்து டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தார்
 
உலகின் சக்திவாய்ந்த மற்றும் திறமையான மின்சார கார் ரேஸ் இந்தியாவில் நடைபெற உள்ளது என்றும் மூன்றாவது தலைமுறையான இந்த போட்டி மிகவும் சுவராசியமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் தெலுங்கானா மாநில அரசாங்கத்துடன் இணைந்து பார்முலா பந்தயத்திற்கு அதிகாரபூர்வ விளம்பரதாரராக ஏஸ் நெக்ஸ்ட் ஜென் என்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. 22 கார்களுடன் மொத்தம் 11 அணிகள் இந்த பந்தயத்தில் விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்