அதில், சரத்குமாr- ஜெயசுதா ஆகியோரின் மகனாக விஜய் நடித்துள்ளார். கூட்டுக்குடும்பத்தை மைப்படுத்தியும், விறுவிறுப்பாகவும் ஆக்சனாக அமைந்துள்ள இப்படத்தின் டிரைலரில், விஜய்- ராஷ்மிகா உள்ளிட்ட நடிகர்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
வீடுங்கறது கல்லு மண்ணுதான் ஆனால் குடும்பம் அப்படியா, எல்லா இடமும் நம்ம இடம் தான்…. நல்ல வேட்டக் காரரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும், கண்ணு திறந்துதான் இருக்கனும், பவர் சீட்டுல இல்ல சார் வந்து உட்கார்ரவன்ட தான் இருக்கும் என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சரத்குமாரின் கடைசி மகனாகவும், புகைப்படக் கலைஞராகவும், இருக்கும் விஜய், தன் தந்தையும் பிசினஸ் மேனுமான சரத்குமாரின் சார்பில் வந்து நல்லபடியாக பிசிஸஸ் கவனிப்பது, எதிரிகளை வேட்டையாடுவதும் இந்தக் கதையின் மையக் கரு என்று தெரிகிறது.