பிரின்ஸ் படம் தோல்வி: விநியோகிஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்தாரா சிவகார்த்திகேயன்?

புதன், 4 ஜனவரி 2023 (08:04 IST)
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வந்ததையடுத்து இந்த படம் வசூலில் அடி வாங்கியது 
 
இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரின்ஸ் படத்தின் தோல்வி காரணமாக விநியோகிஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் இணைந்து நஷ்டத்தில் பாதி தொகையை 6 கோடியை திருப்பி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது அடுத்த படமான ’மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு அடுத்து விநியோகிஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்தது சிவகார்த்திகேயன் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்