வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 469 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்தது. அதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிப்ளி அபாரமாக ஆடி சதமடித்தார். 372 பந்துகளை சந்தித்த அவர் 120 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
பின் வரிசைக்காரரான பென் ஸ்டோக்ஸ் 356 பந்துகளில் 176 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணி விக்கெட்களை இழந்து 469 ரன்கள் சேர்த்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சேர்த்துள்ளது. இமாலய ஸ்கோரின் மூலம் வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.