இங்கிலாந்து அபார பேட்டிங்: மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் திணறல்

வெள்ளி, 17 ஜூலை 2020 (06:39 IST)
இங்கிலாந்து அபார பேட்டிங்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி களமிறங்கியது
 
இதில் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் 15 ரன்களிலும், அதன்பின் கிராலி ரன் ஏதும் எடுக்காமலும்,  ரூட் 49 ரன்களிலும் அவுட் ஆகினர். ஆனால் அதன் பின்னர் விளையாடிய சிப்லே 86 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இருவரின் அபார ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோசப் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய கேப்ரியல் மற்றும் ஹோல்டர் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்