500 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை செய்தார் ஸ்டூவர்ட்: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (18:58 IST)
500 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை செய்தார் ஸ்டூவர்ட்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அவர்கள் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6 பந்து வீச்சாளர்கள் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றுள்ளார் என்பதும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை ஸ்டூவர்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 292 ரன்கள் அந்த அணி எடுக்க வேண்டும் என்பதால் இங்கிலாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகவே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்