அதையடுத்து இப்போது நடந்த வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிராட் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடியது. 2 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 398 ரன்கள் முன்னிலை பெற்றது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் நாள் முடிவில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் எப்படியும் இங்கிலாந்து வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல ஆயத்தமாகி வருகிறது இங்கிலாந்து.