6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்: இங்கிலாந்து அபாரம்

ஞாயிறு, 26 ஜூலை 2020 (07:03 IST)
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது
 
 
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான சிப்லே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். கேப்டன் ரூட் 17 ரன்களில் ரன் அவுட்டானார். இருப்பினும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் அபாரமாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார். அதேபோல் அந்த அணியின் போப் மற்றும் பட்லர் அபாரமாக விளையாடி தலா 91 மட்டும் 67 ரன்களை குவித்தனர். கடைசி நேரத்தில் பிராடு அதிரடியாக அடித்த 62 ரன்களால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 369 என உயர்ந்தது
 
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை மேற்கிந்திய தீவுகள் அணி தொடங்கிய நிலையில் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரிலேயே பிரெத்வெயிட் தனது விக்கெட்டை இழந்தார். இதன் பின் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சுக்கு சொற்ப ரன்களில் சுருண்டனர். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 47.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. எனவே அந்த அணி தற்போது 232 ரன்கள் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்