ஜடேஜா, அஸ்வின் அபார பந்துவீச்சு.. 246 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (15:13 IST)
இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 246 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து விட்டது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.  இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து அணி 64 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது. 
 
ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். அக்சர் பட்டேல், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த நிலையில்  இந்திய அணி தற்போது முதலாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்