மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

Siva

செவ்வாய், 13 மே 2025 (08:05 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் மே 17ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 13 லீக் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அந்த போட்டிக்கான தேதிகள் மற்றும் குவாலிபையர், எலிமினேட்டர், குவாலிபையர் 2 மற்றும் இறுதி போட்டிக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுதிப் போட்டி ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் முழு அட்டவணை இதோ.

 
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இனி சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாவதாக இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையில் சில அணிகளின் சொந்த ஊர் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என்பதும், தென்னிந்தியாவில் பெங்களூரில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்